நடிகர் மாதவன் நடிக்க இருக்கும் புதிய படம்..!

நடிகர் மாதவன் இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

Update: 2021-12-19 15:12 GMT
சென்னை,

பல மொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் மாதவன், அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயாராக இருக்கும் மாதவன் தற்போது இயக்குனர் அறிவழகனின் படத்தில் நடிக்க இருக்கிறார்.

பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த மாதவனிடம் இயக்குனர் அறிவழகன் பலமொழிகளில் எடுக்கும் வகையான கதை ஒன்றை கூறியுள்ளார். அந்தக் கதையால் ஈர்க்கப்பட்ட நடிகர் மாதவன் அறிவழகனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதவன் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் பலமொழித் திரைப்படமான 'ராக்கெட்ரி நம்பி விளைவு' ரிலீசுக்குத் தயாராக உள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இயக்குனர் அறிவழகன் தற்போது நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'பார்டர்' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். 'பார்டர்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்