"சாரி கண்ணா.. தைரியமா இரு....ரசிகைக்காக ரஜினி வெளியிட்ட வீடியோ ...

உடல் நலக் குறைவால் ரசிகரின் மகள் ஒருவர் தன்னை பார்க்க விரும்புவதை அறிந்த ரஜினிகாந்த் வீடியோ காலில் பேசி அந்த பெண்ணுக்கு தைரியமான வார்த்தைகளை கூறியுள்ளார்.

Update: 2021-12-18 09:13 GMT
சென்னை,

பெங்களூரைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவரின் மகள் சவுமியா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் ரஜினியை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதை அந்த ரசிகர் வீடியோவாக வெளியிட்டு சமூகவலைதளங்களில் வைரலாக்கினார்.

இது ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த ரசிகரின் மகளுடன் வீடியோ காலில் பேச முடிவு செய்து அவருடன் பேசினார். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் ரஜினி பேசுகையில் ஹலோ சவுமியா, எப்படி இருக்க.. உனக்கு ஒன்னும் ஆகாது.. சாரி கண்ணா என்னால உன்ன வந்து பாக்க முடியாது. இப்ப கொரோனா இருக்குறதனால, எனக்கும் உடம்பு சரியில்ல.. இல்லனா உன்ன வந்து பார்த்துருப்பேன் கண்ணா... தைரியமா இரு.. உனக்காக நான் பிரே பண்றேன்.

சிரிக்கும் போது நீ எவ்ளோ அழகாய் இருக்கே.. எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியுள்ளார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்