'புஷ்பா' படத்தில் ஆடியோ சரியாக கேட்கவில்லை : தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

திருப்பதியில் உள்ள ஒரு தியேட்டரில் படக்காட்சியின் போது ஆடியோ சரியாக கேட்காததால் தியேட்டரை ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்

Update: 2021-12-18 04:52 GMT
திருப்பதி 

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன்  நடித்துள்ள திரைப்படம் ' புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது .தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் நேற்று வெளியானது .இந்நிலையில் ஆந்திர  மாநிலம் திருப்பதியில் உள்ள ஒரு திரையரங்கில் தமிழில்  ' புஷ்பா'  திரையிடப்பட்டது.  
 படக்காட்சியின் போது ஆடியோ  சரியாக   கேட்காததால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து உட்கார்ந்திருந்த  நாற்காலிகளை உடைத்து ,நாற்காலிகளை ஆபரேட்டர் அறைக்குள் வீசினர் .இதனால் திரையரங்கில் பரபரப்பு  ஏற்பட்டது .இதனை அறிந்து வந்த  காவல் துறையினர்  ரசிகர்களை சமாதானப்படுத்தினர் 


 

மேலும் செய்திகள்