இசையமைப்பாளராக 400 படங்களை தாண்டினார், தேவா

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவா, 1986-ம் வருடம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் இசையமைத்த முதல் படம், ‘மாட்டுக்கார மன்னாரு’. இதுவரை 400 படங்களுக்கும் மேல் இசையமைத்து இருக்கிறார்.

Update: 2021-12-12 10:29 GMT
தேவா இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் சொந்த குரலில் பாடியும் வருகிறார். “விதம்விதமா சோப்பு சீப்பு கண்ணாடி”, “சலோமியா”, “ஊனம் ஊனம்...”, “ஜித்து கில்லாடி” ஆகியவை தேவா பாடிய பாடல்களில் சில.

சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஆள் இல்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ.’ படத்தில், “வெட்கமில்ல மானமில்ல சூடு சொரணை எதுவும் இல்ல” என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம். அதைத் தொடர்ந்து 12 புதிய படங்களில் பாடுவதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தேவா கூறுகிறார்.

மேலும் செய்திகள்