‘சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ என்று படத்துக்கு பெயர் வைத்தது ஏன்?
தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அடையாளங்கள் கிடைப்பதில் இந்த முறை இடம் பிடித்திருக்கும் படம், ‘சர்க்கரை தூக்கலாக ஒரு புன்னகை.’
கோவா திரைப்பட விழா, சில்வர் ஸ்கிரீன் திரைப்பட விழா, மெக்சிகோ திரைப்பட விழா என பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இந்த படம் விருது பெற்றுள்ளது.
இந்த படத்தில் புதுமுகம் ருத்ரா கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக சுபிக்சா நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி மகேஷ் பத்மநாபன் டைரக்டு செய்திருக்கிறார். படத்தை பற்றி இவர் பேசும்போது...
‘‘கதைப்படி ஆடியோகிராபியில் தங்கப்பதக்கம் வாங்கியவன், நான். ஆனால் சூழ்நிலை காரணமாக சொந்த ஊரில் வசிக்கிறேன். சென்னையில், அதே துறையில் பணிபுரியும் கதாநாயகி டாகுமெண்டரிக்காக என் உதவியை நாடுகிறார்.
மக்களை கவரவேண்டும் என்பதற்காகவே படத்துக்கு இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டது. இது ஒரு காதல் கதை என்பதால் படத்துக்கு பெயர் பொருந்தியது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. பறவைகள், விலங்குகளின் ஒலிகளை யதார்த்தமாக பதிவு செய்துள்ளோம். படம், இம்மாதம் திரைக்கு வரும்.’’
இவ்வாறு அவர் கூறினார்.