கதாநாயகியான ஜீவிதா மகள்
நட்சத்திர தம்பதிகளான ஜீவிதா, ராஜசேகரின் இளைய மகள் சிவாத்மிகாவும் ஆனந்தம் விளையாடும் வீடு படம் மூலம் கதாநாயகியாகி உள்ளார்.
கமல்ஹாசன் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன், நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ், நடிகை லிசியின் மகள் கல்யாணி, நடிகை ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி, மறைந்த நடிகை ஶ்ரீதேவி மகள் ஜான்வி உள்ளிட்ட வாரிசு நடிகைகள் கதாநாயகிகளாகி உள்ளனர். இந்த வரிசையில் நட்சத்திர தம்பதிகளான ஜீவிதா, ராஜசேகரின் மகள்கள் ஷிவானி, சிவாத்மிகா ஆகியோரும் நடிக்க வந்துள்ளனர்.
ஷிவானி ஏற்கனவே 2 தமிழ் படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் இளைய மகள் சிவாத்மிகாவும் ஆனந்தம் விளையாடும் வீடு படம் மூலம் கதாநாயகியாகி உள்ளார். ஜீவிதா தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவிதா கூறும்போது,
‘‘எனது மகள்கள் நடிக்க வந்துள்ளனர். இருவரும் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கிறார்கள். தற்போது கதாநாயகியாகி உள்ள சிவாத்மிகாவுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றார். மேலும் பிரபல பட நிறுவனங்களிடம் மகளுக்கு பட வாய்ப்பும் கேட்டு வருகிறார்.