’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டீசர் வெளியானது

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.

Update: 2021-12-10 09:58 GMT
சென்னை 

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்  சிம்பு நடிக்கும் படம் 'வெந்து தணிந்தது காடு'.  இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் .மாநாடு திரைப்படம்  வெளியீடு காரணமாக  படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது .மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இரு தினங்களுக்கு முன்பு நடிகர்  சிம்பு தெரிவித்திருந்தார் .

 இந்நிலையில்  'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் டீசர் தற்போது  வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்