ஜி.வி. பிரகாஷின் செல்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது
நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள செல்பி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேச்சிலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இடி முழக்கம் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் வகை திரைப்படமான 'செல்பி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய 'வி கிரியேசன்ஸ்' மூலம் தயாரித்துள்ளார்.
டிரைலர் வெளியானது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ஜி.வி. பிரகாஷ், 'என்னுடைய கேரியரின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று வந்து கொண்டிருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
One of my career best film is on its way..make way for #SelfieTrailer with my favourite banner @theVcreationshttps://t.co/ThwjH29NwX#Selfie@MathiMaaran@menongautham@VarshaBollamma@DGfilmCompany@DG_Gunanidhi@D_Sabareesh_@SonyMusicSouth@urkumaresanpro
— G.V.Prakash Kumar (@gvprakash) December 2, 2021