மோகன்லாலின் மரைக்காயர் திரைப்படம் முன்பதிவின் மூலமே ரூ. 100 கோடி வசூல்... !

மோகன்லாலின் மரைக்காயர் முன்பதிவின் மூலமே ரூ.100 கோடி வசூலானதாக மலையாளப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்ப்ட்டு உள்ளது.

Update: 2021-12-01 09:10 GMT
சென்னை

மோகன்லால் நடித்துள்ள மரைக்காயர் - அரபிக் கடலின்டே சிம்ஹம் திரைப்படம் முன்பதிவில் 100 கோடிகளை உலக அளவில் வசூலித்துள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர்.

டைரக்டர்  பிரியதர்ஷன் இயக்கத்தில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் மரைக்காயர் திரைப்படம் நாளை டிசம்பர் 2 உலகம் முழுவதும் வெளியாகிறது.இதில் . பிரனவ் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், பாசில், சித்திக், நெடுமுடி வேணு, இன்னோசெண்ட் உள்பட பலர் நடித்து உள்ளனர்.

மரைக்காயர்  தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு படம் வெளியாகிறது. கோழிக்கோட்டில் வசித்த குஞ்சாலி மரைக்காயர் வெள்ளையனுக்கு எதிராக கப்பல் படை திரட்டி போர் செய்தார் என்பது வரலாறு. அதனை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓடிடி வெளியீடு என்று சொல்லி கடைசி நேரத்தில் இப்போது திரைக்கு வருகிறது.

கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம், அதிக ரசிகர்கள் காட்சிகள், அதிக சிறப்புக் காட்சிகள், அதிக ஒருநாள் காட்சிகள், அதிக முன்பதிவு என அனைத்திலும் இப்படம் சாதனைப் படைத்துள்ளது. உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் மலையாளப் படமும் இதுவே. ஐந்து மொழிகளில் 4,100 திரையரங்குகளில் படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர். முதல்நாள் காட்சிகள் மட்டும் உலக அளவில் 1,600.

இந்தப் படத்தின் முன்பதிவின் மூலமே 100 கோடிகள் வசூலானதாக மலையாளப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர். இப்படியொரு சாதனையை செய்த முதல் இந்தியப் படம் இது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையாக இருந்தால் நிச்சயம் பெரிய சாதனைதான்.

மேலும் செய்திகள்