நடிகர் பொன்னம்பலம் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் பொன்னம்பலம். சண்டை கலைஞரான இவர் 1988-ல் கலியுகம் படத்தில் நடிகராக அறிமுகமானார்.

Update: 2020-07-11 05:52 GMT
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, நாட்டாமை, மாநகர காவல், உள்ளத்தை அள்ளித்தா, மாயி, சாமி, செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், செந்தூரப்பாண்டி, முத்து, இந்தியன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பொன்னம்பலத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக கோளாறும் இருந்தது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோர் பொன்னம்பலத்துக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். பொன்னம்பலத்தின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை கமல்ஹாசன் ஏற்றுள்ளார்.

மேலும் செய்திகள்