தர்பார் திரைப்படம் வெளியானது - ரசிகர்கள் உற்சாகம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வெளியானது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் இன்று வெளியானது. தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, இன்று அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்துடன் தியேட்டர்கள் முன் திரண்டனர். உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியானது.