ஆயுத பூஜையில் ரஜினியின் அடுத்த படம்?

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை ஆயுத பூஜையில் திரைக்கு கொண்டு வர ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

Update: 2020-01-03 23:30 GMT
ரஜினியின் தர்பார் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது ரஜினிக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள குடும்ப படமாக தயாராவதாக கூறப்படுகிறது.

இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். முத்து படத்துக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் மீனா ஜோடி சேர்ந்துள்ளார். ரஜினி 2 பெண்டாட்டிகாரராக நடிப்பதாகவும் குஷ்பு, மீனா இருவரும் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் பேச்சு அடிபட்டது. குஷ்பு வில்லியாக வருகிறார் என்று இன்னொரு தகவலும் பரவியது.

இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அடுத்து புனேயில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் தற்போது படத்தை ஆயுத பூஜையில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்ப பணிகள் செப்டம்பர் மாதத்துக்கு முன்பே முடிந்து விடும் என்பதால் தீபாவளிக்கு முன்னதாகவே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்