‘ஸ்லம்டாக் மில்லினர்’ நடிகை பிரீடா பின்டோ நிச்சயதார்த்தம்

ஸ்லம்டாக் மில்லினர் நடிகை பிரீடா பின்டோ-கோரி டிரான் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Update: 2019-11-22 23:00 GMT
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருதை பெற்று தந்த ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் மும்பையை சேர்ந்த பிரீடா பின்டோ நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து மிரால், கேர்ள் ரைசிங், இம்மார்டல்ஸ், டெசர்ட் டான்சர், லெஜண்ட் ஆப் ஜங்கிள், மோக்லி உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவுக்கு வந்த புதிதில் ரோஹன் அன்டோ என்பவரை பிரீடா பின்டோ காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் அவரை பிரிந்து ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் தன்னுடன் நடித்த தேவ் படேலை காதலித்தார். ஒரு கட்டத்தில் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.

அதன்பிறகு ஹாலிவுட் நடிகரான ஆரோன் பாலின் நண்பரான கோரி டிரான் என்ற புகைப்பட கலைஞருடன் நெருக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்து பின்னர் காதலர்களாக மாறினர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் பிரீடா பின்டோ-கோரி டிரான் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பிரீடா பின்டோ, “வாழ்க்கை இப்போது நன்றாக உள்ளது. என் அன்புக்குரியவருடன் இருக்கிறேன். எனது வாழ்க்கையில் நுழைந்த அழகான காதலனை எனக்குள்ளேயே தங்க வைக்கப்போகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்