சாதனை படைக்கும் தொழில் முனைவோரை கௌரவிக்கும் டேலி சொல்யூஷன்ஸ்
டேலி சொல்யூஷன்ஸ் என்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் மேலாண்மை தீர்வுகளை அளித்து வருகிறது. சர்வதேச எம்எஸ்எம்இ நாளை முன்னிட்டு இந்நிறுவனம் தங்களின் இரண்டாவது பதிப்பான எம்எஸ்எம்இ ஹானர்ஸ் பதிப்பை உலக அளவில் வெளியிட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, அடிமட்டத்திலிருந்து எல்லா துறைகளிலும் சிறந்த மேலாண்மை வழிமுறைகளை கடைப்பிடித்து சமுதாயத்திற்கு பன்முகத்தன்மை கொண்ட, சளைக்காத, நேர்மறையான பங்களிப்பை கொடுத்து வருவதற்கு, தாங்கள் உறுதுணையாக இருப்பதை கொண்டாடும் விதத்தில் டேலி சொல்யூஷன்ஸ் இந்த கௌரவிப்பை செய்கிறது. நாட்டின் கிழக்கு மேற்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்தும், நான்கு பிரிவுகளில் இருந்தும், ஐந்து தலைப்புகளின் கீழ் இந்த கௌரவத்தை அளித்து கொண்டாடுகிறது டேலி சொல்யூஷன்ஸ்.
வொண்டர் வுமன்
தொழிலில் பல சவால்களை சந்தித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் பெண் தொழில் முனைவோர்கள் இப்பிரிவில் வருகின்றனர்.
பிஸ்னஸ் மேஸ்ட்ரோ
வலிமையான நீடித்து நிலைக்கும் அடித்தளம் கொண்ட தொழிலை நிறுவி தொடர்ந்து வளர வழி வகுத்துள்ள முன்னோடிகள் இதில் அடங்குவார்கள்.
நெக்ஸ்ட் ஜென் ஐகான்
தொழில் சந்தையில் உள்ள இடைவெளியை, ஏற்கனவே உள்ள தீர்வுக்கு மாற்று தீர்வை வெற்றிகரமாக கண்டுபிடித்து அளித்துவரும் தொழில் முன்னோடிகள் இப்பிரிவில் வருவார்கள்.
டிஜிட்டல் டிரான்ஸ்ஃபார்மர்
தங்கள் தொழிலில் புதுப்புது டிஜிட்டல் உத்திகளையும் தீர்வுகளையும் கடைபிடித்து தொழில் வளர்ச்சி கண்டுள்ள தலைவர்கள் இவர்கள்.
சாம்பியன் ஆப் காஸ்
தங்களுக்கு முன்னே உள்ள சவால்களை புறந்தள்ளி சமுதாயத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ள தொழில்முனைவோர்கள் இதில் வருவார்கள்.
தங்களின் இரண்டாவது பதிப்பில் (எம்எஸ்எம்இ ஹானர்ஸ்), உலகம் முழுவதிலிருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கள் பல பிரிவுகளில் இருந்தும் கலந்து கொண்டனர். இதிலிருந்து 97 தொழில்களை நடுவர்கள் தேர்ந்தெடுத்தனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்துகொண்டு வெற்றி பெற்ற தொழில் முனைவோர் பட்டியல் கீழ்வருமாறு.
பிரிவு - பிஸ்னஸ் மேஸ்ட்ரோ
விக்னேஷ். ஆர், A1 சிப்ஸ் பிரைவேட் லிமிடெட், கோயம்பத்தூர்
1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிப்ஸ் மற்றும் கார வகைகள் தயாரிப்பு நிறுவனம், சிறு தொழிலாக கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டு இன்று கோயம்புத்தூர், திருப்பூர், பாலக்காடு, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் 39 கடைகளுடன் மிக நவீன தயாரிப்பு வசதிகளுடன் வளர்ந்து வந்துள்ளது.
இங்கு 200 வகையான சிப்ஸ், சிறந்த இனிப்பு வகைகள், கார வகைகள் மற்றும் உயர்தரமான கொக்கோவில் செய்யப்பட்ட சாக்லேட்டுகள் மிகப் பிரபலம்.
அஜய் கே ரங்காணி, அம்பிகா வுட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை
1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மரப் பலகைகள் மற்றும் கம்புகள் விற்கப்படும் நிறுவனம், தடை செய்யப்படாத காட்டுப் பகுதிகளில் இருந்து மரங்களை சேகரித்து அதன் மூலம் பலகைகள் மற்றும் கம்புகளை தயார் செய்கின்றன. இந்நிறுவனம், மிகவும் திறமை வாய்ந்த பணியாட்களும், சிறந்த வாடிக்கையாளர்களின் பாராட்டும், நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிற் கருவிகளும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
ஆர்.கிரிராஜன், சிறுவாணி யார்ன்ஸ், திருப்பூர்
1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூல் ஆலை புதுமையான நவீன ஃபேன்சி இழைகள் மற்றும் புதுமையான ஆடைகளையும் தயாரிக்கிறது. நவீன ஆடை உற்பத்தி நிறுவனங்களின் தேவைக்கேற்ப இந்நிறுவனத்தில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த மனித திறன்களை பயன்படுத்தி தொழிலை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.
பிரிவு - சாம்பியன் ஆப் காஸ்
கே ரவீந்திரன், சாய்க்ராம் ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்பத்தூர்
கோயம்புத்தூரை அடித்தளமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், கிராமப்புற மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கும் , 9 முதல் 19 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி முழுமையான ஆயுர்வேத மருத்துவத்தை அளித்து வருகிறது. இதுவரை இவர்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவு - டிஜிட்டல் டிரான்ஸ்பார்மர்
எஸ்.வி. சூரஜ் சுந்தர சங்கர், எஸ்விஎஸ் ஃபுட்ஸ், மதுரை.
1934ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது எஸ்விஎஸ் ஃபுட்ஸ். மாவு உற்பத்திக்காக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 83 வெற்றிகரமான வருடங்களை முடித்து, நான்கு தலைமுறை மேலாண்மையை பார்த்து, புரட்சிகரமான முறைகள் மூலம் வளர்ந்து வந்துள்ளது. சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல் மற்றும் செமி ஆட்டோமேட்டிக் முழு ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் கொண்டு தயாரிப்பது, பதப்படுத்துவது மற்றும் பொதி செய்தல் போன்ற வேலைகளை சிறப்பாக செய்து வருகிறது. இதன் மூலம் இன்று இவர்களுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
ராம்மோகன் என்ஆர்சி அக்ரோ, சென்னை
1953இல் சென்னையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மொத்த கொள்முதல் விற்பனையாளராக இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இவர்கள் தங்களின் தொழிலை டிஜிட்டல் முறைகளை
புகுத்தி, தொழில் மேலாண்மை மென்பொருள் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் நூறு வெவ்வேறு நபர்களிடமிருந்து கொள்முதல் செய்து 30 ஆயிரம் கிலோ காய்கறிகளை தினமும் 200 வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதை சாத்தியமாக்கியது இவர்கள் தங்கள் தொழிலில் டிஜிட்டல் முறையை பயன்படுத்தியதால் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிவு - நெக்ஸ்ட் ஜென் ஐகான்
பஸ்லுர் ரஹ்மான், டேலண்ட் பெப்ஸ் கேரியர் சொல்யூஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை.
திறமைக்கும் வேலை வாய்ப்பிற்கும் சமன் ஏற்படுத்தும் வகையில், 2018-ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். சிறந்த பயிற்றுவிப்பு மற்றும் வழிநடத்துதல் மூலம் இவர்கள் கிட்டத்தட்ட 4000 பயனாளர்களுக்கு மேலாக, ஏழு கல்வி நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மூலமும், 2 கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒப்பந்த மூலமாகவும் இணையவழி கல்வியை அளித்து வருகின்றனர்.
பிரேம் ஆண்டனி ராஜ்.எம் ஐ, ஈகோஇந்தியன் – ஈகோஜாரா இனிஷியேட்டிவ்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழில் நிறுவனம் தென்னிந்தியாவில், முதல் ஜீரோ வேஸ்ட் கடையாக அறிமுகமாகி இன்று பிளாஸ்டிக் அல்லாத பல கடைகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. பிளாஸ்டிக் பயன்படுத்தாத இ காமர்ஸ் போர்ட்டல் மூலம் மளிகை பொருட்களை விற்கும் நிறுவனமாக இந்திய அளவில் பெயர் பெற்றுள்ளது இந்நிறுவனம். பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை வாங்க தங்கள்
வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் 3 டன் அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை இந்நிறுவனம் தவிர்த்து உள்ளது. 100 டன் வரையிலான பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்ப்பதை தங்களின் நோக்கமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் மனசாட்சியை தூண்டி ஈகோஇந்தியன் என்ற நோக்கத்தை அடையும் விதமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிரிவு - வொண்டர் வுமன்
டாக்டர் மணிமேகலை மோகன், எஸ்எஸ்விஎம் வேர்ல்ட் ஸ்கூல் கோயம்பத்தூர்
2010ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை கொண்டு தொடங்கப்பட்டது எஸ்எஸ்விஎம் வேர்ல்ட் ஸ்கூல். நவீன பயிற்றுவிக்கும் முறை, தொடர்ந்து முன்னேறும் முறைகள் மற்றும் கல்வியில் ஆன்மீகம் போன்றவைகளை சரியான விகிதத்தில் கலந்து மாணவர்களுக்கு கல்வி போதிப்பதை தன் நோக்கமாக கொண்டுள்ள டாக்டர் மணிமேகலை இருபத்தி மூன்று வருடங்களாக இந்த முறையை பயன்படுத்தி வருகிறார். தற்போது இப்பள்ளியில் 2000 மாணவர்கள் படிப்பதுடன், 25 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் ஆறு இடங்களில் இப்பள்ளி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
கீதா கோபாலன், அகத்யாஸ் என்டர்பிரைசஸ், கரூர்
2004-ஆம் ஆண்டு தன் கணவரால் தொடங்கப்பட்ட அகத்யாஸ் என்டர்பிரைசஸ் என்ற மர தயாரிப்பு கம்பெனியை இவர் தலைமையேற்று விரிவுபடுத்தி இன்று பலவிதமான மரத்தாலான கதவுகள் ஜன்னல்கள்
பிரேம்கள் பாரம்பரியமான பர்னிச்சர்கள் என்று எல்லாவிதமான மர சாமான்களுக்கும் ஒரே இடமாக மிக பிரம்மாண்டமாக விருத்தி செய்துள்ளார்.
பானுப்பிரியா.டி, பேஸ்கோ (ஃபேக்டரி ஆட்டோமேஷன் சொல்யூசன்ஸ்) கோயம்புத்தூர்
2014ஆம் ஆண்டு தன் கணவரால் தொடங்கப்பட்ட பேஸ்கோவின் இயக்குனராக இருப்பவர் பானுப்பிரியா. இவர்கள் ஃபேக்டரி ஆட்டோமேஷன் சிஸ்டம் மற்றும் எஸ்பிஎம் மெஷின்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர் கணவர் தொடங்கிய இந்த தொழிலில் இவர் சேர்ந்த பின்பு தங்களின் தொழிற்கூடத்தில் ரோபோடிக் ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ் டெவலப்மென்ட் என்ற முறையை தொடங்கி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு தோல்வி இல்லாத வகையில் 25க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு 15 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வருவாய் வளர்ச்சியுடன் தொழிலை திறம்பட நடத்திவருகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள தொழில் முனைவோர்களையும், மேலும் அவர்களைப்போல சிறப்பான முறையில், தங்களின் புதுமையான எண்ணங்கள் மற்றும் சிறப்பான தொழில் திட்டங்கள் மூலம் பல பேரின் வாழ்க்கை தரத்தை மாற்றி சமுதாயத்தின் பல பிரிவினரையும் இணைத்து பெரிய அளவில் சேவை செய்துவரும் இவர்களுக்கு, டாலி சொல்யூஷன்ஸ் மரியாதை செலுத்துகிறது.
ஹானர்ஸ் மற்றும் மற்ற வெற்றியாளர்களை பற்றி தெரிந்து கொள்ள https://tallysolutions.com/msme-honours/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.
#AlwaysAweSME #MSMEHonours #MSME #SmallBusiness #MSMEDay2022 #இன்டெர்னஷனல்ம்சமேடாய்