உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி: எகிப்து அணி சாம்பியன்...!
உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதி ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி எகிப்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
சென்னை,
4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்து அணி 4-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரைஇறுதியில் மலேசியா அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியில் அபய் சிங், ஜோஸ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் எகிப்து-மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் எகிப்து அணி 4-1 என்ற கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி எகிப்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Related Tags :
Next Story