செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதும் 2வது சுற்று ஆட்டம் தொடங்கியது


செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதும் 2வது சுற்று ஆட்டம் தொடங்கியது
x

Image : International Chess Federation Twitter

தினத்தந்தி 23 Aug 2023 5:07 PM IST (Updated: 23 Aug 2023 5:21 PM IST)
t-max-icont-min-icon

கார்ல்சென் –பிரக்ஞானந்தா மோதும் 2வது சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

பாகு,

10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் – இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் ஆட்டத்தின் 35வது நகர்த்தலுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது. இதையடுத்து இன்று 2வது சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடுகிறார்.

2வது சுற்று போட்டியும் டிரா ஆனால் டை பிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வரலாறு படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story