உலக செஸ் தரவரிசை : முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் விஸ்வநாதன் ஆனந்த்
நார்வேயில் நடைபெற்று வரும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஆனந்த் பங்கேற்றுள்ளார்.
நார்வே,
செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். விஸ்வநாதன் ஆனந்த் நார்வேயில் தற்போது நடைபெற்று வரும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ளார். இவர் இந்த தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை நேற்று வீழ்த்தினார்.
இந்த நிலையில் தனது 52 வயதில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். மேக்சிம் வச்சியர்-லாக்ரேவ் மற்றும் வெசெலின் டோபலோவ் ஆகியோருக்கு எதிராக இரண்டு வெற்றிகளைப் பெற்ற ஆனந்த் 10 புள்ளிகள் அதிகம் பெற்று 2 ஆயிரத்து 761 எலோ ரேட்டிங் உடன் 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
Related Tags :
Next Story