தர்மபுரியில் மாநில செஸ் போட்டி-1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


தர்மபுரியில் மாநில செஸ் போட்டி-1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x

தர்மபுரியில் மாநில செஸ் போட்டி நடந்தது. இதில் 1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட செஸ் சங்கம் மற்றும் விவேகானந்தா செஸ் அகாடமி ஆகியவை சார்பில், மாநில அளவிலான 24-வது செஸ் போட்டி தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக், செயலாளர் டாக்டர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கவுசல்யா குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,000 மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை தர்மபுரி மாவட்ட செஸ் சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகர், இணை செயலாளர் ராஜசேகரன், செஸ் கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர் மற்றும் பயிற்சியாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்த போட்டிகள் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை நடக்கிறது.



Next Story