ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்தியாவின் அஸ்வினி-தனிஷா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணபிரசாத்-சாய் பிரதீக் கூட்டணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கட்டாக்,
ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-17, 21-13 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அர்ல்யா நபிலா-அக்னியா ஸ்ரீ ரஹாயூ இணையை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் கிருஷ்ணபிரசாத்-சாய் பிரதீக் கூட்டணி 21-17, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் டிஜெஸ் சட்ரியாஜி-கிறிஸ்டோபர் டேவிட் ஜோடியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ இணை 21-14, 21-14 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் மாட்ஸ் வெஸ்டெர்கார்ட்-கிறிஸ்டின் புஸ்ச் ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டியது.