தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி: சென்னையில் நடக்கிறது
தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி சென்னையில் வருகிற பிப்ரவரி மாதத்தில் நடக்கிறது.
சென்னை,
தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கம் மற்றும் பிரான்ட் மீடியா நிறுவனம் சார்பில் கபடி போட்டியை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்று போட்டி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஜனவரி 25 மற்றும் 26-ந் தேதியில் நடைபெறும் தென் மண்டல போட்டியில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் அணிகளும், கோவை நேரு ஸ்டேடியத்தில் பிப்ரவரி 1 மற்றும் 2-ந் தேதியில் நடைபெறும் மேற்கு மண்டல போட்டியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர் அணிகளும், ஜோலார்பேட்டை ஸ்டேடியத்தில் பிப்ரவரி 8 மற்றும் 9-ந் தேதியில் நடைபெறும் வடக்கு மண்டல போட்டியில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி அணிகளும், திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் பிப்ரவரி 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெறும் கிழக்கு மண்டல போட்டியில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை அணிகளும் கலந்து கொண்டு மோதுகின்றன. நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.
தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக்கின் இறுதி சுற்று போட்டி சென்னையில் பிப்ரவரி 24-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ முறையில் மோதும். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். இதே சமயத்தில் பெண்களுக்கான மாநில சாம்பியன்ஷிப் போட்டியும் சென்னையில் அரங்கேறுகிறது. லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ முறையில் நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.
இந்த தகவலை தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்க தலைவர் சோலைராஜா, செயலாளர் ஏ.ஷபியுல்லா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.
அப்போது திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ் தலைவாஸ் அணி வீரர் அஜித்குமார், பிரான்ட் மீடியா நிறுவனர் தமிழ்செல்வன், வக்கீல் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டிக்கான சின்னம் (லோகோ) அறிமுகம் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story