18 வயதுக்குட்பட்டோருக்கான ஆக்கி தொடர்; நெதர்லாந்திடம் தோல்வியை தழுவிய இந்தியா..!!
இந்திய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தனர்.
ஆம்ஸ்டர்டாம்,
18 வயதுக்குட்பட்ட இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஆக்கி தொடர் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து 7-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதேபோல், ஜூனியர் பெண்கள் அணிகளுக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 7-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story