நான்கு நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆக்கி தொடர்; இந்திய ஆண்கள் அணி வெற்றி
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பெர்லின்,
ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தனது முதல் போட்டியில் ஸ்பெயினுக்கு எதிராக வெற்றியும், 2-வது போட்டியில் ஜெர்மனிக்கு எதிராக தோல்வியும் கண்டிருந்தது.
இந்நிலையில் தனது 3-வது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் நேற்று விளையாடியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4 கோல்கள் அடித்து அசத்தியது. இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியுடன் பலபரீட்சை நடத்த உள்ளது. இந்த தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி ஜெர்மனிக்கு எதிராக தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய பெண்கள் அணி தனது 3-வது போட்டியில் ஸ்பெயின் அணியுடன் இன்று விளையாட உள்ளது.