ஷபாலி வர்மா அதிரடி : சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தி வெலோசிட்டி அணி அபார வெற்றி
வெலோசிட்டி அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனே,
பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முன்னோடியாக கருதப்படும் பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சூப்பர்நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் டிரையல்பிளாசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் சூப்பர்நோவாஸ்-வெலோசிட்டி அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர்நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் குவித்தது. ஹர்மன்ப்ரீத் கவுர் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
இதனை அடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெலோசிட்டி அணி களமிறங்கியது. அந்த அணியின் இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக விளையாடிய அவர் 33 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின் வரிசையில் லாரா வால்வார்ட் - கேப்டன் தீப்தி சர்மா ஜோடி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
வெலோசிட்டி அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 151 ரன்கள் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.