அவர் ஏதோ மேஜிக் செய்கிறார் - இந்திய வீரரை புகழ்ந்த ஒல்லி ராபின்சன்


அவர் ஏதோ மேஜிக் செய்கிறார் - இந்திய வீரரை புகழ்ந்த ஒல்லி ராபின்சன்
x
தினத்தந்தி 14 Feb 2024 5:14 PM IST (Updated: 14 Feb 2024 5:36 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் கலக்கிய பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் உலகின் சிறந்த பந்து வீச்சாளர் பும்ரா என்று 10 முறை சொல்வேன் என்று இங்கிலாந்து வீரர் ஒல்லி ராபின்சன் கூறியுள்ளார். மேலும் அவருடைய திறமையைப் பற்றி தாமும் ஜேம்ஸ் ஆண்டர்சனும் நிறைய விவாதித்ததாகவும் தெரிவிக்கும் ராபின்சன் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"ஜஸ்பிரித் பும்ரா உலகின் சிறந்த பந்து வீச்சாளர் என்று விசாகப்பட்டினத்தில் 10 முறை நான் சொல்லியிருக்க வேண்டும். குறிப்பாக போப்பை அவுட்டாக்கிய விதத்தைப் பார்த்து இவர் ஏதோ மேஜிக் செய்கிறார் என்று எனக்கு தோன்றியது. பின்னர் பென் போக்ஸை அவுட்டாக்கியபோது இவர் இதை விட சிறப்பாக செயல்பட முடியுமா? என்று நினைத்தேன். அவரை பார்க்கும்போது வாவ். இந்த அற்புதமான பவுலரால் இன்னும் ஏதாவது செய்ய முடியுமா? என்று எனக்கு தோன்றுகிறது.

ஒரு பவுலராக நானும் ஆண்டர்சனும் அவரைப் பற்றி கடந்த போட்டியில் பேசினோம். இந்தியாவில் பும்ரா விளையாடுவதை பார்ப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்திய சூழ்நிலைகளில் அது போன்ற செயல்பாடுகளைத்தான் நாங்கள் வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். பும்ராவுக்கு நன்றி. அவர் அசாதாரணமானவர். இங்கே நான் எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கு தேவையான குறிப்புகளை அவர் எனக்கு கொடுத்துள்ளார்" என்று கூறினார்.


Next Story