விராட் கோலி ,ரோகித் சர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு இடமில்லை ? - புதிய டி20 அணியை களமிறக்க பிசிசிஐ திட்டம்
2024 டி20 உலகக்கோப்பையில் முற்றிலும் ஒரு புதிய அணி களமிறக்கப்படும், என்றும் கூறப்படுகிறது.
புதுடெல்லி ,
20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டு நடையை கட்டியது. இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது.
கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி எதிரணிக்கு நெருக்கடி அளிக்ககூட முடியாமல் சரண் அடைந்தது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த அளவு இந்த உலகக்கோப்பை போட்டியில் செயல்படவில்லை. மேலும் உலகக்கோப்பை போட்டியில் மிகவும் நெருக்கடியான தருணங்களில் பெரும்பாலன இந்தியா வீர்ரகள் சரியாக செயல்படுவதில்லை.. இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய டி20 அணியில் கேப்டன் ரோகித் சர்மா ,விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் டி20 அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 2024 டி20 உலகக்கோப்பையில் முற்றிலும் ஒரு புதிய அணி களமிறக்கப்படும், என்றும் ஹர்திக் பாண்டியா நிரந்தர கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து பிசிசிஐ தலைமை அதிகாரிகளில் ஒருவர்,
"இனி ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் டி20 போட்டிகளுக்கான அணியில் இருக்க மாட்டார்கள். எனவும் பிசிசிஐ யாரையும் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தாது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம்." என .பிசிசிஐ தலைமை அதிகாரிகளில் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துடன் கூறியுள்ளார் ,
மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மூத்த வீரர்கள் கவனம் செலுத்துவார்கள்,எனவும் பிசிசிஐ தலைமை அதிகாரிகளில் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துடன் கூறியுள்ளார் ,