டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு... காரணம் என்ன..?


டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு... காரணம் என்ன..?
x

நடப்பு டி20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

பார்படாஸ்,

பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது.

2 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி தலா ஒரு வெற்றி , ஒரு தோல்வி பெற்றுள்ள நிலையில், கடைசி ஆட்டத்தில் நாளை தென் ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற சூழலில் வெஸ்ட் இண்டீஸ் விளையாட உள்ளது.

இந்த ஆட்டத்திற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் மாற்றுவீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கான காரணம் என்னவெனில், சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்து வெளியேறிய பிரண்டன் கிங் மேற்கொண்டு இந்த தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கைல் மேயர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story