2019-ல் தோனியை ரன்அவுட் செய்ததற்காக தற்போதும் என்னைத் திட்டி மெயில்கள் வருகிறது - மார்ட்டின் கப்டில்


2019-ல் தோனியை ரன்அவுட் செய்ததற்காக தற்போதும் என்னைத் திட்டி மெயில்கள் வருகிறது - மார்ட்டின் கப்டில்
x
தினத்தந்தி 27 Nov 2023 12:41 AM IST (Updated: 27 Nov 2023 1:32 PM IST)
t-max-icont-min-icon

2019 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் தோனியை கப்டில் ரன் அவுட் ஆக்கியிருப்பார்.

2019 உலகக்கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு கடைசி கட்டத்தில் தோனி ரன் அவுட் ஆனது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. தோனியை மார்ட்டின் கப்டில் ரன் அவுட் ஆக்கியிருப்பார். இந்த நிலையில், தோனியின் ரன் அவுட் குறித்து தற்போது மார்ட்டின் கப்டில் பேசியதாவது;

"தோனி அடித்த பந்து மேலே செல்வதைப் பார்த்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அப்போது அந்த பந்து என்னை நோக்கி ஒருவிதமாக வந்தது. பந்தை பிடிப்பதற்கு வேகமாக ஓடினேன். அப்போது பந்தை ஸ்டம்ப்களில் எறிவதற்கான வாய்ப்பு இல்லை என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் ஒன்றரை ஸ்டம்புகள் மட்டுமே என் பார்வைக்கு தெரிந்தன. இருப்பினும் நான் ஸ்டம்பை நோக்கி அடிக்க முயற்சித்தேன். எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. அந்த கணத்தில் துல்லியமாக பந்து ஸ்டம்பை அடித்தது. இதனால், நூலிழையில் தோனி ரன் அவுட் ஆனார்.

மேலும் அதை பற்றி கூறவேண்டுமானால், அந்த ரன் அவுட் நடந்ததற்கு பிறகு மொத்த இந்தியாவிற்கும் என்னை பிடிக்கவில்லை. இந்திய ரசிகர்களிடம் இருந்து தற்போது வரையிலும் எனக்கு ஏராளமான வெறுப்பூட்டும் மின்னஞ்சல்கள் வருகின்றன" இவ்வாறு கப்தில் கூறினார்.


Next Story