டி20 உலகக் கோப்பை: அரையிறுதி போட்டியில் டேவிட் மலான் விளையாடுவது சந்தேகம்?


டி20 உலகக் கோப்பை: அரையிறுதி போட்டியில் டேவிட் மலான் விளையாடுவது சந்தேகம்?
x

Image Courtesy: AFP 

இந்திய அணி நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி வரும் நவம்பர் 10ம் தேதியன்று அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரான டேவிட் மலானுக்கு இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டதால், இந்தியா உடனான அரையிறுதியில் அவர் பங்கேற்பது தற்போது சந்தேகமாகியுள்ளது.

டேவிட் மலான் குறித்து இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் மொயின் அலி பேசுகையில், "பல ஆண்டுகளாக எங்களின் சிறந்த வீரர்களில் ஒருவராக டேவிட் மலான் இருந்து வருகிறார். அவரது காயம் குறித்த முழு விவரம் எனக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கு நேர்மையாகச் சொல்ல வேண்டும் எனில் அவர் விளையாடும் அளவிற்கு நன்றாக இல்லை" என்றார்.


Next Story