நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அந்தியூர்பத்ரகாளியம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் அமைப்பு


நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அந்தியூர்பத்ரகாளியம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் அமைப்பு
x
தினத்தந்தி 16 Oct 2023 6:42 AM IST (Updated: 16 Oct 2023 7:23 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியை பண்டிகை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று தொடங்கியது. இதையொட்டி கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப் பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடினர். வருகிற 23-ந் தேதி வரை கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. மேலும் தினமும் மாலை வேளைகளில் கோவிலில் பஜனை பாடல்கள் பாடப்படுகிறது.

இதேபோல் அந்தியூர் பகுதியில் பக்தர்கள் பலர் தங்களுடைய வீடுகளிலும் கொலு பொம்மை வைத்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.


Next Story