சொரிமுத்து அய்யனார் கோவிலில் திரண்ட பக்தர்கள்


சொரிமுத்து அய்யனார் கோவிலில் திரண்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 25 March 2024 5:54 PM IST (Updated: 25 March 2024 6:04 PM IST)
t-max-icont-min-icon

இன்று காலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி,

பங்குனி உத்திர திருவிழா தென் மாவட்டங்களில் குலதெய்வ கோவில்களில் மிகவும் வெகு விமரிசையாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலிலும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்றும், இன்றும் கொண்டாடப்பட்டது. அதனால் தமிழக முழுவதும் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சென்றனர். இன்று காலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். முன்னதாக தாமிரபரணி ஆற்றில் புனித நீராடியும் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக நேற்று போல் இன்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு பணியில் பாபநாசம், முண்டந்துறை வனத்துறையினர் மற்றும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story