#லைவ் அப்டேட்ஸ்: டான்பாஸ் பிராந்தியத்தின் கடைசி நகரை பிடிக்க ரஷியா கடும் சண்டை
உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தின் கடைசி நகரை பிடிக்க ரஷியா கடும் சண்டையிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Live Updates
- 1 July 2022 1:38 PM IST
ரஷிய படைகள் வசம் சென்றது சிவியரோடோனெட்ஸ்க் நகரம்..! பாதாள அறைகளை விட்டு வெளியே வரும் மக்கள்
உக்ரைனில் உள்ள சிவியரோடோனெட்ஸ்க் நகரை ரஷிய படைகள் முழுமையாக கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு போர் ஓய்ந்ததால், பாதாள அறைகளில் பதுங்கி இருந்த மக்கள் வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.
ஒரு லட்சம் மக்கள் வசித்த சிவியரோடோனெட்ஸ்க் நகரம் ரஷிய தாக்குதலால் உருக்குலைந்து காட்சியளிக்கிறது. 2 மாதங்களாக குடிநீர், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாயு இன்றி தவித்த மக்கள், இடிபாடுகளில் இருந்து தங்கள் உடமைகளை மீட்க பாதாள அறைகளை விட்டு வெளியே வரத் தொடங்கி உள்ளனர்.
- 1 July 2022 10:51 AM IST
உக்ரைனின் ஒடேசா அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷியா உக்ர தாக்குதல்: 17 பேர் பலி
இரண்டு ரஷிய ஏவுகணைகள் கருங்கடல் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள ஒன்பது மாடி அடுக்குமாடி கட்டிடம் மற்றும் ஓய்வு விடுதியை அதிகாலை தாக்கியதில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடேசாவின் பில்ஹோரோட்-டினிஸ்ட்ரோவ்ஸ்கி மாவட்டத்தை தாக்கிய இரண்டாவது ஏவுகணை, ஒரு குழந்தை உட்பட மூன்று பேரைக் கொன்றது மற்றும் ஒருவர் காயமடைந்ததாக உக்ரைனின் உள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டாவது ஏவுகணை ஒரு பொழுதுபோக்கு மையத்தின் மூன்று மாடி மற்றும் நான்கு மாடி கட்டிடத்தை தாக்கியது என்று அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
- 1 July 2022 6:03 AM IST
உக்ரைனின் ஒடேசா ஒப்லாஸ்ட் மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், 7 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ஒடேசா ஒப்லாஸ்ட் கவர்னர் ஹெர்கீ பிராட்டு கூறுகையில், “ரஷிய ஏவுகணை 9-அடுக்கு உயரத்தில் தாக்கியது. மற்றொன்று பில்ஹொரோடு - டின்ஸ்டாரோவ்க்சி மாவட்டத்தில் உள்ள ஓய்வு வளாகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அதில் 10 பேர் கொல்லப்பட்டனர், 7 பேர் காயமடைந்தனர்” என்று அவர் தெரிவித்தார்.
- 1 July 2022 5:11 AM IST
உள்நாட்டில் இடம்பெயர்ந்த உக்ரேனியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தாயகம் திரும்புவதாக ஐ.நா தகவல்
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு உக்ரைனில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர், இருப்பினும் 6.2 மில்லியன் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, திரும்பி வந்தவர்களில் 15 சதவீதம் பேர் ரஷியாவின் போரினால் தங்கள் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவித்து வருவதாக தெரிவித்துள்ளது.
- 1 July 2022 4:49 AM IST
ரஷிய ராணுவம் இல்லாத பாம்பு தீவை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
மேலும் செயற்கைக்கோள் வெளியிட்ட படங்களில், உக்ரைனின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் கருங்கடலில் அமைந்துள்ள பாம்பு தீவின் வடக்குப் பகுதியில் அழிக்கப்பட்ட பல வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் தெரிகின்றன.
- 1 July 2022 4:27 AM IST
உக்ரைனின் வெற்றி: கருங்கடல் பாம்பு தீவின் பாதுகாப்பு நிலையத்தை ரஷியா கைவிட்டது
உக்ரேனிய துறைமுகங்கள் மீதான ரஷியாவின் முற்றுகையின் பிடியை தளர்த்தக்கூடிய உக்ரைனுக்கு வெற்றியாக நேற்று பாம்பு தீவின் மூலோபாய கருங்கடல் புறக்காவல் பாதுகாப்பு நிலையத்தை ரஷிய படைகள் கைவிட்டன.
உக்ரைனில் இருந்து தானியங்களை அனுப்ப அனுமதிக்கும் மனிதாபிமான நடைபாதையை திறப்பதற்கான ஐ.நா. முயற்சிகளை மாஸ்கோ தடுக்கவில்லை என்பதைக் காட்ட "நம்பிக்கையின் அடையாளமாக" உக்ரைனின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக ரஷியா கூறியது.
- 1 July 2022 3:55 AM IST
லிசிசான்ஸ்கில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது - கவர்னர் தகவல்
ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளான கிழக்கு உக்ரைனில் உள்ள லிசிசான்ஸ்க் நகரின் நிலைமை "மிகவும் கடினமாக உள்ளது" என்றும், இடைவிடாத குண்டுவீச்சு தாக்குதல்களால் பொதுமக்களை வெளியேற்றுவது சாத்தியமில்லை என்றும் லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே தெரிவித்தார்.
மேலும் , நிறைய குண்டுவீச்சு தாக்குதல்கள் பல திசைகளில் இருந்து வருகிறது. ரஷிய இராணுவம் வெவ்வேறு திசைகளில் இருந்து லிசிசான்ஸ்க் நோக்கி நெருங்கி வருகிறது என்று செர்ஜி கெய்டே தனது டெலிகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
- 1 July 2022 3:20 AM IST
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், இப்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான போராக மாறி உள்ளது.
இந்த பிராந்தியத்தில் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி நகரமான லிசிசான்ஸ்க் நகரை முற்றுகையிட்டு கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
அங்கு தற்போது கடும் சண்டை நடந்து வருகிறது. டான்பாஸ் பிராந்தியத்தில் லுகான்ஸ்க் பகுதியில் 95 சதவீதமும், டொனெட்ஸ்க் பகுதியில் பாதியளவும் ரஷியாவின் கைகளுக்கு வந்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
டான்பாஸ் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட முழுமையாக ரஷிய மொழிதான் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவது தொடர்பாக துர்க்மேனிஸ்தானில் நேற்று பேசிய ரஷிய அதிபர் புதின், “உக்ரைன் மீதான எனது நோக்கம் மாறி விடவில்லை. டான்பாஸ் பிராந்தியத்தை விடுவிப்பது, அங்குள்ள மக்களை பாதுகாப்பது, ரஷியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நிலைமைகளை உருவாக்குவதுதான் எனது நோக்கம் ஆகும்” என குறிப்பிட்டார்.