சிரியா: வெடிகுண்டு விபத்தில் ஈரான் ராணுவ அதிகாரி பலி


சிரியா: வெடிகுண்டு விபத்தில் ஈரான் ராணுவ அதிகாரி பலி
x

கோப்புப்படம்

சிரியாவில் வெடிகுண்டு விபத்தில் ஈரானை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

தெஹ்ரான்,

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011-முதல் நடைபெற்று வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

இதில் சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத்திற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரிய ராணுவத்திற்கு ஆதரவாக தனது படைகளையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்த நிலையில், சிரியாவில் வெடிகுண்டு விபத்தில் ஈரான் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட ராணுவ அதிகாரி கர்னல் தாவூத் ஜாபரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சுமத்தி உள்ளது.

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம், ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story