பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு
பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கமிட்டி பல்வேறு பிரகடனங்களையும் பரிசீலனையில் கொண்டு அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
அப்துல் ரஹ்மான் மக்கியை ஏற்கெனவே இந்தியா , அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. அப்துல் மக்கி பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி அவர்களை மூளைச்சலவை செய்து தாக்குதலுக்கு தயாராக்குவது. குறிப்பாக இந்தியா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த இளைஞர்களைத் தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவில் 2011 நவம்பர் 26ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் தான் இந்த அப்துல் மக்கி. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தேவையான அனைத்து நிதி ஆதாரங்களையும் திரட்டுவதில் இவர் முக்கியப் பங்கு செலுத்தி வருகிறார்.
2020 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்புக் குழு மக்கியை குற்றவாளி என அறிவித்து சிறைத் தண்டனை விதித்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மக்கியை சர்வதேச பயங்கரவாதியை அறிவித்தாலும் கூட சீனா பல தருணங்களில் பாகிஸ்தானை சேர்ந்தவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க முட்டுக்கட்டை போட்டது. இந்நிலையில் இப்போது மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.