பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயருமா? பாகிஸ்தான் மத்திய நிதி மந்திரி பதில்
பாகிஸ்தானில் கோதுமை மற்றும் இதர தானியங்களின் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இஸ்லாமாபாத்,
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் பண வீக்கம் மற்றும் அன்னிய செலாவணி குறைபாட்டால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் கோதுமை மற்றும் இதர தானியங்களின் தட்டுப்பாட்டால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே பெட்ரோல் விலையும் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் பணவீக்கம் 35 சதவீதத்திற்கு குறைந்ததால் சர்வதேச சந்தைகளில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் பெட்ரோல் விலையை பாகிஸ்தான் அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான அரசு அறிவிப்பில்,
சர்வதேச சந்தைகளில் பெட்ரோலின் விலை மாறுபாடு மற்றும் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்வில் இரு வேளை உணவு கிடைக்கவே போராடி வருகின்றனர். கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி விட, தற்போது இன்று(ஏப்ரல் 16) பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி,
* பெட்ரோல் விலை ரூ.10 அதிகரித்து ரூ.282க்கு விற்பனை ஆகிறது.
* மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186.07-க்கு விற்கிறது.
அதேசமயம் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. டீசல் விலை லிட்டருக்கு 293 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலை மீண்டும் 10 முதல் 14 ரூபாய் வரை உயர்த்தப்படும் என மத்திய நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.