7 போலீஸ்காரர்கள் ; போலீஸ் ஸ்டேஷனிலேயே "உல்லாசம்"...! பெண் போலீஸ் அதிகாரியின் அட்டகாசம்


7 போலீஸ்காரர்கள் ; போலீஸ் ஸ்டேஷனிலேயே உல்லாசம்...! பெண் போலீஸ் அதிகாரியின் அட்டகாசம்
x

7 போலீஸ்காரர்கள் போலீஸ் ஸ்டேஷனிலேயே "உல்லாசம்"...! பெண் போலீஸ் அதிகாரியின் அட்டகாசம் கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்டனர்

டென்னசி

அமெரிக்காவின் டென்னசி போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் உள்ள இதர போலீஸ்காரர்களோடு இவர் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்த நிலையில், இது குறித்து ஏற்கெனவே பலமுறை எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் 5 போலீஸ்காரர்களுடன் சேர்ந்து தனியாக பார்ட்டி நடத்துவது, அதில் ஆபாச நடனம் ஆடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்திருக்கின்றன. இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்திருக்கிறது. மட்டுமல்லாது போலீஸ்நிலையம் முழுவதும் இது குறித்து மட்டுமே பேச்சா இருந்து உள்ளது. சில போலீசார் இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இத்தனை நாட்கள் எச்சரித்து வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த புகாரை தொடர்ந்து அதிரடியாக விசாரணையில் இறங்கினர். விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 28ம் தேதி முதல் நடைபெற்று வந்த விசாரணையில் காவல்துறைக்கு சொந்தமான ஜிம்மில் இப்பெண் காவலர் இரண்டு போலீஸ்காரர்களுடன் உல்லாசமாக நெருக்கமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல அந்த தினத்திலேயே போலீஸ் நிலையத்திற்குள்ளும் இப்பெண்காவலருடன் வேறு இரண்டு போலீஸ்காரர்களுடன் உல்லாசமாக இருந்து உள்ளார். சரி இவ்வளவுதானா என்றால் கிடையாது.

இப்பெண் மேலும் சில அதிகாரிகளின் வீட்டிலும், படகுகளிலும் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்தது தெரிய வந்துள்ளது. பெண் காவலரை இது தொடர்பாக விசாரித்த நிலையில் இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டன.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆண் போலீசாரிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஆண் போலீசார் சிலர் தொடக்கத்தில் இது குறித்து மறுத்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவத்தை வாக்குமூலமாக பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள், இதில் வேறு யாரேனும் ஈடுபட்டிருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரிக்க தொடங்கினர்.

இந்த விவகாரம் காரணமாக பெண் போலீசில் கணவர் அவருடன் உடலுறவு கொள்ள மறுத்ததாகவும், விவாகரத்து கோருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது இந்த பிரச்சனையின் தீவிரத்தை அதிகரித்தது.

முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை முடியும் வரை தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் பெண் போலீஸ் அதிகாரியின் செல்போனை பறிமுதல் செய்த உயர் அதிகாரிகள், அதில் வந்த மெஸேஜ்களை சோதனை செய்திருக்கின்றனர். இதில், மேலும் பல போலீசார் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல போலீசார் இப்பெண்காவலருக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளனர்.

பின்னர் ஏற்கெனவே தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த 5 பேருடன் மேலும் இரண்டு பேரும் இடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் விசாரணை முடிவில் போலீஸ் நிலையத்தில் ஆபாசமான செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காகவும், பெண் ஒரே நேரத்தில் பலபேர் உடலுறவு கொண்டதன் காரணமாகவும் சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் உட்பட 8பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் இப்பெண் போலீஸ் அதிகாரியின் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளதால் இந்த முடிவை காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டிலிருந்து பெண் போலீஸ் அதிகாரி காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு இப்பணியில் சேர்ந்த பின்னர் அதிகமாக குடி பழக்கம் உருவாகியிருக்கிறது. மேலும், அத்துடன் சில போதை பழக்கங்களும் தொற்றிக்கொண்டுள்ளன.

இதுதான் இப்பெண் காவல் அதிகாரி இப்படி மாறுவதற்கு காரணம் என்று காவல்துறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன. மேலும், "அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண் பெண்ணின் பாலியல் விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகள் அவர்களது தனிப்பட்ட உரிமை. ஆனால் காவல்துறை அதிகாரியாக பணியாற்றும்போது பணி நேரங்களில் ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என்று காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.


Next Story