தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல்
தூத்துக்குடியில்வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
தூத்துக்குடி எழில்நகரை சேர்ந்த ரவி மகன் பால்செல்வம் (வயது 28). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதிக்கு சென்றார். அங்கு அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் ஜேசு மரிய ராஜா (34), தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை மகன் சங்கர்துரை (30), தருவைகுளம் பத்துவீடு தெருவை சேர்ந்த சூசைராஜா மகன் ஆரோக்கியராஜ் (43) ஆகிய 3 பேரும் வந்துள்ளனர். அந்த 3 பேரும் பால்செல்வத்தின் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதை பால்செல்வம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் பால்செல்வத்தை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பால்செல்வம் அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசு மரிய ராஜா, சங்கர்துரை மற்றும் ஆரோக்கியராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.