தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திட்டக்குடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூர்
திட்டக்குடி:
திட்டக்குடியை அடுத்த கூத்தப்பன் குடிகாடு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பரமசிவம் மகன் விஜயகுமார்(வயது 30). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். ஆனால் கடன் தொல்லை காரணமாக விஜயகுமார் தான் கட்டிய வீட்டை அவரது உறவினர் பெண் ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்று விட்டு வாடகை வீட்டில் வசித்து வந்தார். பின்னர் உறவுக்கார பெண் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு கூடுதல் விலைக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தான் ஏமாந்ததை உணர்ந்து விரக்தி அடைந்த விஜயகுமார் நேற்று மாலை வாடகை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story