ஆரல்வாய்மொழியில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


ஆரல்வாய்மொழியில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x

ஆரல்வாய்மொழியில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில்தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் பிள்ளை. காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ராம்குமார் (வயது 34), டிப்ளமோ படித்து விட்டு காற்றாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 1 மாதமாக காற்றாலைக்கு செல்வதை ராம்குமார் தவிர்த்தார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த ராம்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story