திண்டுக்கல் கோர்ட்டில் வாலிபர் சரண்
மதுரையில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திண்டுக்கல் கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.
திண்டுக்கல்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கேசம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 37). என்ஜினீயர். இவர் கடந்த 24.6.2022 அன்று தனது தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கனகராஜ் கொலை வழக்கில் போலீசார் தன்னை தேடுவதாக கூறி, கேசம்பட்டியை சேர்ந்த மதிவாணன் (33) என்பவர் திண்டுக்கல் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து அவர் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story