மொபட் திருடிய வாலிபர் கைது
வடமதுரை அருகே, மொபட் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கோகுல ஈஸ்வரன் (வயது 27). இவர், திண்டுக்கல் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இவர், தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், மொபட்டை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மடக்கி பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடையை சேர்ந்த ஆரோக்கிய ஜெயக்குமார் (27) என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான ஆரோக்கிய ஜெயக்குமார் மீது, சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.