பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே உள்ள கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28). இவரது மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். அதே பள்ளியில் தென்னவன் (30) என்பவரின் சகோதரியின் மகளும் படித்து வருகிறார். இரு குழந்தைக்கும் வகுப்பறையில் பென்சில் பாக்சை தூக்கி வீசியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு குழந்தைகளும் தங்களது பெற்றோர்களிடம் கூறினர். இதுகுறித்து கேட்பதற்காக பள்ளிக்கு சென்ற சிவரஞ்சனியை, தென்னவன் வழிமறித்து தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் சிவரஞ்சனியை தென்னவன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் சிவரஞ்சனி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னவனை கைது செய்தனர். பின்னர் அவரை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story