பெண்ணை தாக்கிய வாலிபர் கைது


பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
x

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி

நெல்லையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பேட்டை படையாச்சி தெருவை சேர்ந்த அன்னலட்சுமி (வயது 38) என்பவர் வேலை செய்து வந்தார். அங்கு மேலகுன்னத்தூர் இந்திரா காலனியை சேர்ந்த அழகு லட்சுமணன் (22) என்பவரும் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னலட்சுமி கொடுத்த வேலையை செய்வதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அன்னலட்சுமியை, அழகு லட்சுமணன் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளார்.

இதுகுறித்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் வழக்கு பதிவு செய்து அழகு லட்சுமணனை கைது செய்தார்.


Next Story