ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் யோகாசனம் செய்த நீதிபதிகள்
ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் யோகாசனம் செய்த நீதிபதிகள்
ஈரோடு
ஈரோடு
சர்வதேச யோகாசன தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஈரோடு மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள் சார்பில் யோசாகன நிகழ்ச்சி ஈரோடு சம்பத்நகர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பி.எம்.சரவணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஈரோடு கோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
இதுபோல் பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி, அந்தியூர் கோர்ட்டுகளில் அந்தந்த கோர்ட்டு நீதிபதிகள் தலைமையில் சர்வதேச யோகாசன தினம் கொண்டாடப்பட்டது. நீதிபதிகள், வக்கீல்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
Related Tags :
Next Story