திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம் ரத்து
திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம் ரத்தானது.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்றுமுன்தினம் நடைபெற இருந்த மஞ்சள் ஏலம் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் தெரிவித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு புது மஞ்சள் ஏலம் ஆரம்பித்த நாள் முதல் போதிய இடவசதி இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஏலம் நடைபெறுமா இல்லையா என போன் மூலம் கேட்டு தெரிந்த பிறகு மஞ்சள் கொண்டு வர வேண்டி உள்ளது. இந்த ஆண்டு மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விற்பனை செய்வதும் கடினமாக உள்ளது. மேலும் திருச்செங்கோடு நகரின் பல பகுதிகளில் வாடகை கிடங்குகளிலேயே ஏலம் நடைபெறுகிறது. அதனால் லாரி வாடகை உள்ளிட்ட கூடுதல் செலவீனங்கள் ஏற்படுகிறது. இந்த சங்கத்திற்காக 48 கைலாசம்பாளையத்தில் வழங்கப்பட்டு இதுவரை அந்த இடத்தில் கிடங்குகளோ, களமோ கட்ட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் கலந்து பேசி மாவட்ட கலெக்டரிடம் முறையிட போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.