கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு


கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது.

தென்காசி

சிவகிரி:

தென்காசி மாவட்ட வருவாய் அளவில் காலியாக உள்ள சிவகிரி தாலுகா இனாம் கோவில்பட்டி, அரியூர், ராமநாதபுரம் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெறப்பட்டது. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. கண்காணிப்பு அலுவலர் தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, சிவகிரி தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

416 பேர் எழுதவேண்டிய எழுத்துத் தேர்வில் 316 பேர் தேர்வு எழுதினர். துணைத்தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story