போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 2-வது நாளாக எழுத்து தேர்வு
நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 2-வது நாளாக நடந்த எழுத்து தேர்வை 384 பேர் எழுதினர்.
நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 2-வது நாளாக நடந்த எழுத்து தேர்வை 384 பேர் எழுதினர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி
தமிழகத்தில் காலியாக உள்ள 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எழுத்து தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி, சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 10 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வுக்காக 7,918 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் 6,603 பேர் மட்டுமே தேர்வுக்கு வந்திருந்தனர். 1,315 பேர் வரவில்லை.
2-வது நாளாக எழுத்து தேர்வு
நேற்று 2-வது நாளாக நடைபெற்ற எழுத்து தேர்வினை போலீசில் குறிப்பிட்ட தகுதியுடன் பணியாற்றுகிறவர்கள் எழுதினர். நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் நடந்த தேர்வை எழுதுவதற்கு 478 போலீசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதில் 384 போலீசார் மட்டுமே பங்கேற்று தேர்வு எழுதினர். 94 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.