உலக ஹீமோபிலியா தினம்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உலக ஹீமோபிலியா தினம் கொண்டாடப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தலைமையில் உலக ஹீமோபிலியா தினம் கொண்டாடப்பட்டது. இத்தினத்தை ஒட்டி நோய் பாதிப்படைந்தவர்களுக்கு ரத்தம் வடிதலை தடுத்தல் குறித்து விளக்கி கூறப்பட்டது. குழந்தைகள் சிகிச்சை தலைமை மருத்துவர் டாக்டர் முருகேச லட்சுமணன் ரத்தம் வடிதலைதடுக்கும் வழிமுறைகள் குறித்தும், அதற்கான மருந்துகள் குறித்தும் விரிவாக கூறினார். மேலும் குழந்தைகளுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுவது குறித்தும் அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்தும் விளக்கிக்கூறப்பட்டது. இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண், துணை கண்காணிப்பாளர் டாக்டர் அன்புவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story