வனத்துறை சார்பில் உலக சுற்று சூழல் தினம்


வனத்துறை சார்பில் உலக சுற்று சூழல் தினம்
x

பேரணாம்பட்டில் வனத்துறை சார்பில் உலக சுற்று சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடப்பட்டது.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு வனசரகம் சார்பில் உலக சுற்று சூழல் தினம் பத்தலப் பல்லி கிராமத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடி பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வனத்துறையும் பத்தலப்பல்லி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இணைந்து வனப்பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்த பிளாஸ்டிக் ்குப்பைகள்,கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

கிராம வனக் குழுதலைவர் சக்கரவர்த்தி, இயற்கை ஆர்வலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சுற்று சூழலை பாதுகாத்திட நாவல், இலுப்பை, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டனர். சுற்று சூழலை பாதுகாக்கவும், மாசு கட்டுப்படுத்தவும், வெப்பமயமாதலை தடுத்திட மரக்கன்றுகளை நட்டு பசுமையை காத்திட பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டு மஞ்சள் பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வனவர்கள் ஹரி, தயாளன், தரணி, வனகாப்பாளர் செல்வம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்


Related Tags :
Next Story