தொழிலாளி தற்கொலை
ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே மாறாந்தை அம்பலவாசகர் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 35). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ராஜேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story