விபத்தில் தனியார் நிறுவன தொழிலாளி பலி
ராயக்கோட்டை அருகே விபத்தில் தனியார் நிறுவன தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை
கெலமங்கலத்தை அடுத்த இருதாளம் அருகே அஞ்செட்டி துர்க்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரப்பா. இவருடைய மகன் மனோகர் (வயது 23). கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அந்த பகுதியில் நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மனோகர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story